தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்!

tncmjj in rk nagar

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 227 தொகுதிகளிலும், தோழமை கட்சிகள் 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன. 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதா சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதனைத்தொடர்ந்து இன்று சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி 4-வது மண்டல அலுவலகத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தமது வேட்பு மனுவை, தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.

 -ஆர்.அருண்கேசவன்.