சேலம் மாவட்டம், ஏற்காடு டவுண் பகுதியை சேர்ந்த இளைஞர் அமைப்பினர் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஏற்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் புங்கை, சொர்க்கம், அசோகா, அத்தி, கொன்றை, பாதானி உள்ளிட்ட மர கன்றுகள் நட்டுள்ளனர்.
மேலும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதாகவும், ஏற்காட்டில் மரங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டு விட்டதாலும் மரங்களை நட்டுள்ளதாகவும், இந்த மரங்களின் பராமரிப்பையும் தாங்களே மேற்கொள்ளவிருப்பதாகவும், மாதம் ஒருமுறை இளைஞர்கள் இணைந்து பல்வேறு பகுதிகளில் மர கன்றுகளை நடவுள்ளதாகவும் கூறினர்.
–நவீன் குமார்.