சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையின் 16 -ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே புதிதாக இயக்கப்பட்ட சிறப்பு பேருந்து ஒன்று ரேடியட்டரில் தண்ணீர் இல்லாமல் கோளாறாகி நின்றது. பின்னர் அங்கு வந்த மற்றொரு சிறப்பு பேருந்து ஓட்டுனர் பேருந்தை வளைக்க முடியாமல் அங்கேயே நிறுத்தினார்.
இதனால் அங்கு வந்த அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் பேருந்துகள் ஓரம் கட்டி நிறுத்தியபின் அனைத்து வாகனங்களும் மெதுவாக சென்று வந்தன.
-நவீன் குமார்.