கூலிக்கு மாரடிக்கும் ‘தினமலர்’ ஊடகம்!- வேடிக்கைப் பார்க்கும் தேர்தல் ஆணையம்!

dinamalar ADdinamalar

இன்று (03.05.2016) முதல் ‘தினமலர்’ நாளிதழில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியாக உள்ளது. இதை தடை செய்ய தேர்தல் ஆணையம் விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 02.05.2016 இரவு 8-34 மணிக்கு தமிழக தேர்தல் ஆணையத்திற்கு தொலைபேசி மூலமாகவும், இரவு 9-15 மணிக்கு தமிழக தேர்தல் அதிகாரிக்கு மின்னஞ்சல் மூலமாகவும் புகார் அளித்தோம். 

UTL complaint for tn. ceo

ஆனால், இன்று காலை வரை தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

dinamalar ELECATION

தினமலர் குழுமம் திட்மிட்டப்படி வாங்கிய கூலிக்கு மாரடிக்கும் வகையில் ‘தினமலர்’ நாளிதழில் இன்று (03.05.2016) கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு இன்று முதல் தொடர்ந்து ஒரு வாரம் வெளியாகும் என்று, தினமலர் துணை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 11.04 மணிக்கு தமிழக தேர்தல் ஆணையத்திற்கு தொலைபேசி மூலமாக தொடர்புக் கொண்டு, நேற்று நாங்கள் கொடுத்த புகாருக்கு ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

பணம் மற்றும் பொருட்களை மட்டும் உடனே பாய்ந்து சென்று பறிமுதல் செய்யும் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பாகவும், ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் ‘கருத்துக்கணிப்பு’ என்ற பெயரில் கூலிக்கு மாரடிக்கும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் ஏன் தயங்குகிறது?

பணம் மற்றும் பொருட்களை மட்டும் பறிமுதல் செய்யும் தேர்தல் அதிகாரிகள் ‘கருத்துக்கணிப்பு’ வெளிவரும் பத்திரிகைளை பறிமுதல் செய்து, ஊடகப் பதிவை ரத்து செய்து, ஊடக நிறுவனங்களின் அலுவலகங்களை பூட்டி சீல் வைக்க வேண்டியதுதானே? என்று காட்டமாக கேள்வி எழுப்பினோம்.

நீங்கள் கேட்பது நியாயமான கேள்விதான், புகாரை பதிவு செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பது மட்டும்தான் எங்கள் வேலை. உங்கள் புகாரை இப்போது பதிவு செய்து கொண்டோம். அதற்கான கம்ளைண்ட் ஐடியும் உங்களுக்கு அனுப்பி விடுவோம். நிச்சயமாக இதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று, அந்த பெண் அதிகாரி கூறினார். அதன்படி எங்களது புகார் பதிவு செய்யப்பட்டதற்கு அடையாளமாக Tracking Number: 14483-2016-HH வந்துள்ளது. இதற்கு பிறகாவது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com