திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் தினகரன், செங்கம் ஒன்றியத்தில் மேல்பள்ளிப்பட்டு, மேல்ராவந்தவாடி, கட்டமடுவு, நீப்பத்துரை, இளங்குண்ணி, குருமப்பட்டி, ராமாபுரம், ஆண்டிப்பட்டி, புளியாம்பட்டி, மேல்வணக்கம்பாடி, புரசப்பட்டு, அரட்டவாடி, தாழையுத்து தண்டா ஆகிய கிராமங்களில் இரண்டு நாட்கள் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
அப்போது மேல்பள்ளிப்பட்டு, மேல்வணக்கம்பாடி ஆகிய கிராமங்களில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அனைத்து ஊர்களிலும் பேண்ட் வாத்தியங்களுடன் பட்டாசுகள் வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது வேட்பாளர் தினகரன் வாக்காளர்களின் காலில் விழுந்து, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தார்.
அப்போது ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமையில், ஒன்றிய குழு தலைவர் கணேசன், ஒன்றிய பேரவை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வசேகர், சந்தோஷ், கலைவாணன், பொன்னையன், சென்னம்மாள், குமார், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜெகதீசன், ஆறுமுகம், நகர எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எஜி ராஜா, மாவட்ட பேரவை துணைத்தலைவர் பன்னீர், நகர பேரவை செயலாளர் குமார், வழக்கறிஞர்கள் செல்வம், மகபூப்பாஷா மற்றும் தேவராஜ், ராஜரத்தினம், டீகடை ராஜாமணி, சி.ரவி, ராணி, அந்தனுர் கோவிந்தன், சுந்தர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
-செங்கம் மா.சரவணக்குமார்.