‘தினமலர்’ நாளிதழில் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளிவருவதற்கு முன்பே இதை தடை செய்ய தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன் கூட்டியே தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தேர்தல் அதிகாரிக்கும் புகார் தெரிவித்தோம். ஆனால், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தினமலர் நிர்வாகம் திட்மிட்டப்படி வாங்கிய கூலிக்கு மாரடிக்கும் வகையில் ‘தினமலர்’ நாளிதழில் 03.05.2016 அன்று கருத்துக்கணிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், “கூலிக்கு மாரடிக்கும் ‘தினமலர்’ ஊடகம்!- வேடிக்கைப் பார்க்கும் தேர்தல் ஆணையம்!” என்ற தலைப்பில் 03.05.2016 அன்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில் இன்று (04.05.2016) தினமலர் தேர்தல் கருத்துக் கணிப்புக்கும், எங்களுக்கும் எவ்விதமான சம்மந்தமும், தொடர்பும் கிடையாது என, ஈரோடு மற்றும் சேலம் தினமலர் நிர்வாகம் பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.லெட்சுமிபதி ஆகியோர் மோசடி பேர்வழிகள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com