ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவைக்கான அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெ.ஜெயலலிதா இன்று (05.05.2016) வெளியிட்டார். முதல் பிரதியை தம்பித்துரை பெற்றுக் கொண்டார்.
தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
* ஸ்கூட்டர் வாங்க மகளிருக்கு 50% மானியம் வழங்கப்படும்.
* மகப்பேறு உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* விவசாயிகள்ன் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
* விவசாயகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
* வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கப்படும்.
* அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் கைப்பேசி இலவசம்.
* பொது இடங்களில் இலவச வைபை அமைக்கப்படும்.
* மடிக்கணினியுடன் கட்டணமில்லா இணைய வசதி.
* 100 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் இல்லை.
* 2016-2021 வரை ரூ.40 ஆயிரம் பயிர் கடன் வழங்கப்படும்.
* காவிரி நடுவர் மன்ற இறுதித்திர்ப்பை முழுவதும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை.
* முல்லைப்பெரியாறு நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும்.
* சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படாது.
*அவிநாசி–அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும்.
* வணிகர் நலன் தொகுப்பு நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்.
* மீனவர் நிவாரணத் தொகை ரூ5 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* பத்திரப்பதிவு எளிமைப்படுத்தப்படும்.
* மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம் அமல்படுத்தப்படும்.
* உள்நாட்டு மீன் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம்.
* மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை.
*மீன் பதனப் பூங்காக்கள் தொடர்ந்து அமைக்கப்படும்.
* ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை.
* தமிழகத்தில் ஓடும் ஆறுகளை இணைக்க திட்டம்.
* அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஏழை, எளிய மக்களுக்கு அம்மா பேங்கிக் கார்டு வழங்கப்படும்.
* பொங்கல் திருநாளன்று கோ ஆப்டெக்ஸ் துணிகள் வாங்க ரூ.500 கூப்பன் வழங்கப்படும்.
-எஸ்.திவ்யா.