அரசு மருத்துவமனைக்கு மருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது!

Photo0109Photo0110

திருச்சி, கருமண்டபம் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான மருந்து கிடங்கிலிருந்து தச்சங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு மருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற  திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ரெட்டிமாங்குடி அஞ்சல், மணிகண்டம் கிராமத்தில் வசிக்கும் R.ஆனந்தகுமார் என்பவருக்கு சொந்தமான  பதிவு எண்: TN48 L8985  என்ற “டாட்டா ஏஸ்” என்ற வாகனத்தை திருச்சி மாவட்டம், தச்சங்குறிச்சி கிராமத்தில் வசிக்கும் நடேசன் மகன் மருதுபாண்டி என்பவர் ஓட்டிச் சென்றார். இன்று (23.05.2016) மாலை நெ.1 டோல்கேட் ரவுண்டானா வளைவில் வாகனம் சென்ற போது திடீரென தீப்பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். விசாரணையில் வாகனத்தில் இருந்த ஆசிட் பாட்டில்கள் ஒன்றுடன் ஒன்று உரசி உடைந்து அதனால் தீப்பற்றி எரிந்தது தெரியவந்தது.

மருந்து பொருட்கள் எரிந்ததால் ஒருவிதமான துர்நாற்றம் வீசியது, அதன் காரணமாக தீயணைப்பு வீரர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு தீயை அணைத்தனர். இதனால் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அனைவரும் முகத்தை மூடியபடி சாலையை கடந்து சென்றனர். 

-கே.பி.சுகுமார்.