கங்கைக்கரையில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை! -பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய் தகவல்.  

பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய்.

பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய்.

thiruvalluvar stus

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெறும் கங்கைக்கரையில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை 26-ந்தேதி திறக்கப்படுகிறது. சிலையை உத்தரகாண்ட் முதலமைச்சர் ஹரிஷ் ராவத் திறந்து வைக்கிறார். விழாவில் பல மாநில முதலமைச்சர்களும், கவர்னர்களும் கலந்து கொள்வார்கள்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்க விரைவில் சென்னை செல்கிறேன். 18-ந் தேதி கன்னியாகுமரியில் கங்கை திருவள்ளுவர் பயணம் தொடங்குகிறது.

சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த சிலைக்கு எனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் வழங்கி உள்ளேன். இதற்கு உறுதுணையாக இருந்த பிரதமர் நரேந்திரமோதி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழக முதல்வர் தன்னுடைய கட்சி எம்.பி.க்களுக்கு இந்த திட்டத்துக்கு ஆதரவு தருமாறு அன்புக்கட்டளை இட்டுள்ளார். அவருடைய உதவிக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். திருவள்ளுவர் சிலை முதன்முறையாக கங்கை கரையில் நிறுவப்படுகிறது. இவ்வாறு பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய் தெரிவித்தார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்

ullatchithagaval@gmail.com