காவேரி மேலாண்மை வாரியம், காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உருவாக்கவும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அ.இ.அ.தி.மு.க செயற்குழுவில் தீர்மானம்.

admk meeting

அ.இ.அ.தி.மு.க செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- முழு விபரம்.

2016, தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, இந்திய வரலாற்றில் இணையில்லா மக்கள் தலைவராக 6-ஆவது முறையாய் முதலமைச்சர் பதவியை ஏற்றிருக்கும் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்குப் பாராட்டும், வாழ்த்தும்!

  1. தமிழக மக்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் வாழ்வில் புதிய நம்பிக்கையையும், எழுச்சியையும் வழங்கிடும் வகையில், சட்டமன்றப் பொதுத் தேர்தலில் சிறப்பான வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெற்றுத் தந்த கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி!
  2. கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சர் பதவியேற்றவுடன், தமிழகத்தின் வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தும் வண்ணம் மகத்தான ஐம்பெரும் திட்டங்களில் முதல் கையெழுத்திட்டு, `மக்கள் நலனை காப்பதில் தானே என்றும் முதல்வர்’ என்று பறைசாற்றியமைக்குப் பாராட்டு!
  3. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தேர்தல் அறிக்கையினை தயாரித்தமைக்கும்; தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் தன்னலம் கருதா தியாகத்திற்கும், கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு நன்றியும், பாராட்டும்!
  4. மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரும் பணிகளால் பயன்பெற்று, இரண்டாவது முறையாக மாண்புமிகு அம்மா அவர்களுக்கு மகத்தான வெற்றியினை வழங்கி இருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி!
  5. தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜனநாயகத்தைக் காக்கும் வகையில், தீய சக்தியின் சூதுமதி சூழ்ச்சிகளை முறியடித்து, மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்து வரும் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான நல்லாட்சி தொடர்ந்திட, வாக்களித்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி!
  6. அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காகவும், தமிழ் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காகவும் 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பாரதப் பிரதமரிடம் நேரில் அளித்து, அவற்றை நிறைவேற்றுவதன் அவசியத்தை விளக்கியமைக்காக, கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி!
  7. காவேரி நதி நீரை பயன்படுத்தும் அனைத்து விவசாயப் பெருமக்களும் குறுவை பயிர் வேளாண்மையை வெற்றிகரமாக செய்திட, “குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை” அறிவித்திருக்கும் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி!
  8. மத்திய அரசு, தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ள நிதியையும்; புதிதாக மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றிட மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கோரி இருக்கும் நிதியையும் உடனடியாக வழங்கிட மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!
  9. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதையும்; சிறைபிடிக்கப் படுவதையும்; அவர்களின் படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுத்து நிறுத்திட மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் தொடர்ந்து எழுப்பி வரும் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட மத்திய அரசுக்கு வலியுறுத்தல் !
  10. காவேரி, முல்லைப் பெரியாறு ஆகிய இரு தமிழக நீராதாரப் பிரச்சனைகளில், தமிழ் நாட்டிற்கு நீதி கிடைத்திடவும், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், `காவேரி மேலாண்மை வாரியம்’, `காவேரி நீர் முறைப்படுத்தும் குழு’ ஆகியவற்றை மத்திய அரசு உருவாக்கவும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசுக்கு வலியுறுத்தல் !
  11. அவ்வப்போது ஏற்படும் வறட்சியாலும், வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டு வரும் தமிழக விவசாயிகளின் நலன்களைக் காக்க தமிழக, தென்னக நதிகளை இணைப்பதே நிரந்தரத் தீர்வு’ என்ற மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தொலை நோக்குத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், நதிநீர் இணைப்புத் திட்டத்தை உடனடியாகத் தொடங்கிட மத்திய அரசை வலியுறுத்தல் !
  12. இந்திய நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வண்ணம் உள்ளாட்சிப் பதவிகளில் மகளிருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்றிய கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்குப் பாராட்டு!
  13. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வகையில் அரசியல் பயணத்தை மேற்கொண்டிருக்கும், கழக நிரந்தரப் பொதுச் செயலாளர், மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வகுத்து அளிக்க உள்ள வியூகத்தின்படி செயல்பட்டு, உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியை ஈட்டி, மாண்புமிகு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பொற்கரங்களில் சமர்ப்பிக்க சூளுரை !

   -கே.பி.சுகுமார்.