இலங்கை யாழ்ப்பாணத்தில் துரையப்பா விளையாட்டு அரங்கம் உள்ளது. இந்த விளையாட்டு அரங்கம் 1997–ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் இந்திய அரசால் ரூ.7 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 1,850 பேர் அமரும் வகையில் இடவசதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசால் புதுப்பிக்கப்பட்ட துரையப்பா விளையாட்டு அரங்கத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் இன்று கூட்டாக சேர்ந்து இலங்கை மக்களுக்கு அர்ப்பணித்து வைத்தனர்.
நரேந்திர மோதி புதுடெல்லியில் இருந்தவாறு காணொளி காட்சி மூலம் இந்த விளையாட்டு அரங்கை இந்திய பிரதமர் நரேந்திர மோதி பொத்தானை அழுத்தி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வின் போது வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவுச்செயலர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் முதல் பெரிய நிகழ்ச்சியாக இரண்டாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ளதையொட்டி,யாழ்ப்பாணத்தில் உள்ள மாணவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
யோகா செயல்விளக்க நிகழ்ச்சியில் சுமார் ஏறக்குறைய 8 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், இலங்கை அதிபர் சிறிசேனாவும் இதனை பார்வையிட்டனர்.
-எஸ்.சதிஸ்சர்மா.