கர்நாடக மாநிலம், குந்தாபூரில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் பள்ளிக் குழந்தைகள் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பைந்தூரில் இருந்து குந்தாபுர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, டான் பாஸ்கோ பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு சென்ற மாருதி ஆம்னி வேன் மீது நேருக்கு நேர் மோதியதில், பள்ளி வேனில் இருந்த 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 12 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
வேன் ஓட்டுநர் மற்றும் வேனில் இருந்த பள்ளி ஆசிரியரும் விபத்தில் காயமடைந்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கங்கோலி காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிக பட்சம் 8 நபர்கள் மட்டுமே பயணம் செய்ய கூடிய ஒரு வேனில், 20- க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லலாமா?அதிகாரிகளும் கண்காணிக்கவில்லை, பள்ளி நிர்வாகமும் கவனிக்கவில்லை, பெற்றோர்களாவது விழிப்பாக இருந்திருக்கலாமே? படிப்பை விட, குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியமல்லவா?
– என்.சிவகுமார்.