அலைபேசியில் பேசிக்கொண்டே பேரூந்தை நீண்ட தூரம் ஓட்டிய ஓட்டுனர்!

TN 57 N 1648 TNSTC Driver

TN 57 N 1648 TNSTC

TN 57 N 1648 என்ற அரசு பேரூந்தில் ஓட்டுனர் அலைபேசியில் பேசிக்கொண்டே பேரூந்தை நீண்ட தூரம் ஓட்டியிருக்கிறார். அப்பேரூந்தில் பயணம் செய்த சாதிக் அலி என்ற பயணி இதை கண்டித்து, அந்த ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்துருக்கிறார்.

ஆனால், அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், அலைபேசியில் பேசிக் கொண்டே அந்த ஓட்டுனர் தொடர்ந்து பேரூந்தை ஓட்டியிருக்கிறார். அந்த அரசு பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற  ஓட்டுனர்களால்தான் சாலை விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன.

எனவே, இது குறித்து  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளுக்கு மின் அஞ்சல் மூலமாக,  நமது ‘உள்ளாட்சித் தகவல்’ இணைய ஊடகத்தின் சார்பில் புகார் அளித்துள்ளோம்.  நடவடிக்கையின்   விபரம்  தெரியவந்தால் அதை நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com