கபால ரோக நிதானம்!

சிரோ பிரம்ப லட்சங்கள்:

தலை வலி அதிகமாகும். பிடரியில் பார உணர்ச்சி ஏற்படும். வலது புருவத்தில் குத்தல், காது இரைச்சல், தலையை சொரிந்தால் ஒரு விதமான மதமதப்பு, தொண்டையில் ஒரு விதமான நெருடல் உண்டாகும். கண்ணீர் வடிதல். பீளை, சாரல் முதலான குறிகள் ஏற்படும். தலை உச்சியில் சூடு உண்டாகும். பார்வை மயக்கம் உண்டாகும். தலை சுழட்டும். அடிக்கடி பயம் ஏற்படும். அசதி, சொப்பணங்கள் உண்டாகும். இவை சிரோ பிரம்ப லட்சனங்கள் ஆகும்.

கபால பித்த குறிகள்:

மண்டை உச்சியில் தாங்க முடியாத வலி, மயிர் உதிர்தல், அதிகமான தூக்கம், முகத்தில் பார உணர்ச்சி, அடிக்கடி பயப்படுதல், கை கால்களில் பலவீனம், வியர்வை, விழி சிவத்தல், மூக்கில் இருந்து சீல் வடிதல், மூக்கில் இருந்து நாற்றம், இவை கபால பித்த குறிகள் ஆகும்.

கபால சிலேத்ம குறிகள்:

தேங்காயில் இளநீர் குலுங்குவதை போல, தலையை ஆட்டினால் கொட கொட என்று குலுங்கும். அதிகமான இரும்மல், தலைவலி, முகத்தில் மினுமினுப்பு, கண்களில் அதிகமான வெண்மை, உடலில் காங்கை, அதிகமான வியர்வை முதலான குறிகள் உண்டானால் அது கபால சிலேத்ம குறிகள் ஆகும்.

கபால வறட்சி குறிகள்:
 
தொண்டைக்கு மேல் கபாலத்தில் வறட்சி உண்டாகும். புருவத்தின்யிடை, கண் முதலான இடங்களில் குத்து வலி ஏற்படும். கண்களில் பார்வை குறையும். கண் பார்வை வளைப்போட்டு மறைத்ததை போல இருக்கும். மண்டை முழுவதும் குத்து வலி உண்டாகும். இந்த அறிகுறிகள் கபால வறட்சி குறிகளாகும்.
 
கபால கனப்பின் குறிகள்:
 
மண்டையில் வாயு ஓடி ஓடி குத்தும். உடம்பு வறண்டு போகும். காரணமில்லாமல் உடம்பு நடுங்கும். பெண் போகம் செய்த பின் சிறுநீர் கலங்கி சிவந்து இறங்கும். இவை கபால கனப்பின் குறிகள் ஆகும்.
 
கபால குத்தின் குறிகள்:
 
ஆரம்பத்தில் புருவச்சுளியில் குத்து வலி உண்டாகி, பாம்பின் விஷம் ஏறுவதை போல, தலை உச்சி வரைப் பாயும். பின்னர் சிறிது சிறிதாக குறையும். இக்குறிகள் கபால குத்து குறிகளாகும்.
 
சத்தி கபால குறிகள்:
 
உடம்பை எங்கையோ தூக்கி கொண்டு போவது போல உணர்ச்சி உண்டாகும். கபாலத்தில் குத்து வலி உண்டாகும். தீராத வாந்தி ஏற்படும். மயக்கமும் உண்டாகும். இவை சத்தி கபால குறிகளாகும்.
 
கபால கரப்பானின் குணம்:
 
காதுகளில் பர பர என்று சத்தம் கொடுக்கும். கண்களில் பீளையும், மூக்கிலிருந்து நாற்றமும் வீசும். மூக்கில் நீர் வடியும். சிரசில் வறட்சி ஏற்படும். தலை வலியும் உண்டாகும். இவை கபால கரப்பானின் குறிகளாகும்.
 
கபால வலிக் குறிகள்:
 
நரம்பில் வாயு சேர்ந்து தேகத்தை மெலிவு அடைய செய்யும். தலை வலி உண்டாகும். முகம் கருத்து போகும். விழி மஞ்சள் நிறமடையும். சாப்பாடு உட்செல்லாது. இவை கபால வலிக் குறிகளாகும்.
 
கபால வாயு குறிகள்:
 
தலையில் பார உணர்ச்சியுடன் வலியும் காணும். வீக்கமும் காணும். உடலில் அலர்ஜியும் உண்டாகும். மயக்கம் ஏற்படும். மார்பு, உச்சி மண்டை, கண்கள், முதலான இடங்களில் குத்து வலி அதிகரிக்கும். பிடரி நரம்பிலும் வலி உண்டாகும். தேகத்தில் காங்கை ஏற்படும். காரணம் இல்லாமல் வாய்யில் உமிழ் நீர் ஏற்படும். இக்குறிகள் காணப்படின் அது கபால வாயு குறிகளாகும்.
 
கபாலத்தின் ஒரு புறத்தில் வாயு தங்கி நின்று அந்த ஒரு புறத்தில் குத்து வலி உண்டாகும். வயிறு மந்தமாகும். கண்கள் மயங்கும். ஜ்வரம், குளிர் இவைகளும் ஏற்படும். இவை கபால வாயு குறிகளாகும்.
 
மூளைக் குறைபாடுகளின் குறிகள்:
 
புத்தி நிலை தடுமாறும். விழிகளில் ஒளி மாறும். தூக்கம் வராது. மனதில் அடிக்கடி பயம் ஏற்படும். கேள்விகளுக்கு பதில் சரியானபடி சொல்லமாட்டார்கள். சாப்பிட பிடிக்காது. பித்து பிடித்தவர்கள் போல் இருப்பார்கள். இவை மூளைக் குறைவின் குறிகள் ஆகும்.
 
மண்டை சூலைக் குறிகள்:
 
மூக்கில் இருந்து சளி ஒழுகும். மூக்கில் இருந்து துர்நாற்றம் வீசும். மூக்கின் நடுபாகம் தாழ்ந்து போகும். பேசும் போது மர்மஸ்தானத்தை பிடித்து இழுக்கும். தலையில் இருந்து மயிர் அதிகமாக கொட்டும். தயிர், பால், நெய் இவைகளை பிரியத்துடன் உட்கொண்டால் அவை  உடம்பிற்கு ஆகாது. முகத்தில் பார உணர்ச்சி உண்டாகும். இவை மண்டை சூலைக் குறிகளாகும்.
 
மண்டை வியாதி குறிகள்:
 
தலையில் முடி உதிரும். காது சரிவரக் கேட்காது. வாயை நன்றாக திறக்க முடியாது. தேக உறுப்புகள் வறண்டு கடுப்பு வலி உண்டாகும். பற்கள் கூசும். மூக்கிலிருந்து சீழ் வெளிவரும். முகத்தில் குத்து வலி ஏற்படும். இவைகள் மண்டை வியாதி குறிகளாகும்.

Dr.துரை பெஞ்சமின்., BAMS., M.A., SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,.
மருத்துவ மற்றும் வரலாற்றுச் சுவடிகள் ஆய்வாளர்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com