தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 40 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின்போது, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
தி.மு.க.வைச் சேர்ந்த ஜெகத்ரட்சகன், கல்லூரிகள், மதுபான ஆலை, நட்சத்திர விடுதி ஆகியவற்றை நடத்தி வருகிறார். இந்தநிலையில், அவருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு, தாம்பரம், T.நகர் ஆகிய இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உட்பட 40 இடங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தியாகராயநகரில் அமைந்துள்ள மதுபான ஆலையின் தலைமை அலுவலகம் மற்றும் G.N. செட்டி சாலையில் உள்ள ஜெகத்ரட்சகனின் நட்சத்திர விடுதியிலும் சோதனை நடத்தப்படுகிறது.
இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
-கே.பி.சுகுமார்.