கல்குவாரியில் குளிக்க சென்ற இளைஞன் பாறையில் அடிபட்டு தண்ணீர் மூழ்கி உயிரிழந்தார்.

water death

water death5water death4water death6

சேலம் மாவட்டம், கொண்டலாம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாட்டாமங்களம் அருகில் உள்ள கல்குவாரியில் இன்று(13-07-2016) மதியம் 2.00 மணியளவில்  குளிக்க சென்ற ஹரீஷ் வர்மா (வயது 18) என்ற இளைஞன் தண்ணீரில் குதித்த போது பாறையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதுக்குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி காவல் நிலைய போலிசார், பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு மீட்பு துறையின் உதவியுடன், ஹரீஷ் வர்மா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த ஹரீஷ் வர்மா, சங்ககிரி மோடூர் பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவரின் மகன் என்பதும், +2 வரை படித்துள்ள ஹரீஷ் வர்மா, நண்பரின் வீட்டுக்கு வந்த இடத்தில் நண்பர்களோடு கல்குவாரி தண்ணீரில் குதித்த போது, பாறையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார் என்பதும், போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுக்குறித்து கொண்டலாம்பட்டி காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 -கே.பி.சுகுமார்.