அருணாசல பிரதேசத்தில் அரங்கேறும் அதிரடி அரசியல் சம்பவங்கள்!- உச்சநீதி மன்ற உத்தரவின் உண்மை நகல்.  

Hon'ble Mr. Justice Jagdish Singh Khehar.

Hon’ble Mr. Justice Jagdish Singh Khehar.

Hon'ble Mr. Justice Dipak Misra.

Hon’ble Mr. Justice Dipak Misra.

Hon'ble Mr. Justice Madan Bhimarao Lokur.

Hon’ble Mr. Justice Madan Bhimarao Lokur.

Hon'ble Mr. Justice Pinaki Chandra Ghose.

Hon’ble Mr. Justice Pinaki Chandra Ghose.

Hon'ble Mr. Justice N.V. Ramana.

Hon’ble Mr. Justice N.V. Ramana.

NOTE-APPELLANTS1 NOTE-APPELLANTS2 NOTE-APPELLANTS3

அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நபம் துகி முதலமைச்சர் பதவி வகித்து வந்தார். மாநில சட்டசபையில் மொத்தமுள்ள 60 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு 47 உறுப்பினர்கள் இருந்தனர்.

கடந்த டிசம்பர் மாதம் ஆளும் காங்கிரஸ் கட்சியில் திடீரென பிளவு ஏற்பட்டது. முதலமைச்சர் நபம் துகிக்கு எதிராக 21 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர். இவர்களுக்கு பா.ஜனதாவின் 11 உறுப்பினர்களும், 2 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் மாநில அரசில் பெரும் குழப்பம் நிலவியது.

இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 14-ந்தேதிக்கு திட்டமிட்டு இருந்த மாநில சட்டசபையின் 6-வது கூட்டத்தொடரை ஒரு மாதத்துக்கு முன்னதாக, அதாவது டிசம்பர் 16 முதல் 18-ந்தேதி வரை நடத்துமாறு கவர்னர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா உத்தரவிட்டார்.

மேலும், சபாநாயகர் நபம் ரேபியாவை பதவி நீக்கம் செய்யும் வகையில் தீர்மானம் கொண்டு வருமாறு துணை சபாநாயகரும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவருமான டி.என்.தோங்டாக்கையும் அவர் கேட்டுக்கொண்டார். இதனால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 14 பேரை சபாநாயகர் நபம் ரேபியா தகுதி நீக்கம் செய்தார்.

கவர்னர் உத்தரவின் பேரில் டிசம்பர் 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களும் இணைந்து முன்னாள் நிதி மந்திரி கலிகோ புல் என்பவரை தலைவராக தேர்ந்தெடுத்தனர். மேலும், சபாநாயகர் நபம் ரேபியாவுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.

இவ்வாறு அரசியல் குழப்பம் நீடித்து வந்த அருணாசல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது என மத்திய அரசு முடிவு செய்து, ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது. அதன்படி ஜனவரி 26-ந்தேதி அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பின்னர் அதிருப்தி கோஷ்டி தலைவரான கலிகோ புல், தனக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களுடன் சென்று கவர்னர் ராஜ்கோவாவை சந்தித்து, மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக்கொண்ட கவர்னர் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதை பரிசீலித்த மத்திய அரசு, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக் கொள்வது என ஜனாதிபதிக்கு பரிந்துரைத்தது.

அதன்படி அருணாசல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்பட்டு பிப்ரவரி மாதம் கலிகோ புல் முதலமைச்சராக பதவியேற்றார். அவருக்கு 18 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும், 2 சுயேச்சைகளும் ஆதரவு அளித்தனர். பா.ஜனதாவின் 11 உறுப்பினர்கள் வெளியில் இருந்து ஆதரவளித்தனர்.

இதற்கிடையே மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியது, பின்னர் அது விலக்கி கொள்ளப்பட்டது போன்ற செயல்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் ஜே.எஸ்.கேகர், தீபக் மிஸ்ரா, எம்.பி.லோகுர், பி.சி.கோஸ், என்.வி.ரமணா ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கின் விசாரணை அனைத்தும் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அன்று இந்த வழக்கு தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த வழக்கில் கவர்னரின் உத்தரவுகள் அனைத்தும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கண்டுபிடிக்கப்பட்டால், மாநிலத்தில் முந்தைய நிலையை மீண்டும் கொண்டு வர முடியும் என அறிவித்தது.

இந்த வழக்கில் 13.07.2016 பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், அருணாசல பிரதேசத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந்தேதிக்கு முன் இருந்த நிலையே  மீண்டும் நீடிக்க வேண்டும் எனவும், டிசம்பர் 9-ந்தேதிக்கு பிறகு மாநில கவர்னர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை எனவும் அவை ரத்து செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.

5 நீதிபதிகளும் ஒரு மனதாக அளித்த அந்த தீர்ப்பில் அவர்கள் மேலும் கூறுகையில், மாநில சட்டசபையின் 6-வது கூட்டத்தொடரை முன்கூட்டியே நடத்துமாறு, கவர்னர் பிறப்பித்த உத்தரவு அரசியல் சட்டம் 163 மற்றும் 174-க்கு எதிரானது. டிசம்பர் 9-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட கவர்னரின் உத்தரவின் பேரில் மாநில சட்டசபை எடுத்த அனைத்து நடவடிக்கைகள் மற்றும் முடிவுகளும் தாங்க முடியாதவை என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் அருணாசல பிரதேச சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நபம் துகிக்கு கவர்னர் உத்தரவிட்டு  உள்ளார்.

ஜூலை 16-ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று நபம் துகியிடம், கவர்னர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா கேட்டுக் கொண்டு உள்ளார்

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நிகழ்வு முழுவதும் வீடியோ எடுக்கப்படும், மெஜாரிட்டியானது பிரிவின் மூலம் நிர்ணயம் செய்யப்படும் என்றும், குரல் ஓட்டெடுப்பு மூலம் நடக்காது என்றும் கவர்னர் கூறி உள்ளார்

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com