திருச்சியில் நேற்று (27.07.2016) இரவு பெய்த மழையில் திருச்சி மேலபுதூர் ரயில்வே இரும்பு பாலத்திற்கு கீழ் உள்ள சுரங்கப் பாதையில் மழை நீர் தேங்கி நின்றது குறித்தும், அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பணிக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது குறித்தும், மேலும், இதுக்குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் என்.எஸ்.பிரேமாவிடம் தகவல் தெரிவித்தது குறித்தும், புகைப்பட ஆதாரங்களுடன், நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் விரிவாக செய்தி வெளியிட்டு இருந்தோம்.
செய்தி வெளியான இரண்டு மணி நேரத்திற்குள், திருச்சி மாநகராட்சி ஆணையர் என்.எஸ்.பிரேமாவின் உத்தரவின் பேரில், சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் முழுவதுமாக வெளியேற்றியுள்ளார்கள்.
இன்று மாலை 4 மணி முதல் அந்த வழியாக வாகனப் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி வருகிறது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com