முழு சுகாதார தமிழகம் என்ற தொலைநோக்கு பார்வையின் கீழ், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார மேம்பாட்டு நடவடிக்கையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு, ‘தூய்மையான கிராம இயக்க விருது’ ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
அதன்படி, 2014-15-ம் ஆண்டுக்கான தூய்மையான கிராம இயக்க விருது, வேலூர் மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பாற்கடல் ஊராட்சிக்கு வழங்கப்பட உள்ளது. திருப்பாற்கடல் ஊராட்சிக்கு, விருதுடன் 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும். இந்த பரிசுத் தொகையினை, சுகாதார மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-எஸ்.திவ்யா.