அருணாச்சல பிரதேச முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியாளருமான 47 வயதான கலிக்கோ புல், இட்டா நகரில் அரசுக்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார். முதலமைச்சர் பதவி பறிபோன பின்னரும் அவர் அவ்வீட்டை விட்டு வெளியேறவில்லை. இந்நிலையில், இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் அவ்வீட்டில் மீட்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் அருணாச்சல பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-எஸ்.சதிஸ் சர்மா.