தமிழக கவர்னர் பொறுப்பை ஏற்பதற்காக வித்யாசாகர் ராவ் இன்று (02.09.2016) காலை 11 மணிக்கு மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவரை தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மலர் கொத்து கொடுத்து வரவேற்றார்.
பாராளுமன்ற சபாநாயகர் தம்பித்துரை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ், டி.ஜி.பி அசோக்குமார், போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோரும் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
விமானநிலைய வாசலில் கவர்னருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதை அவர் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் கவர்னரை மோட்டார் சைக்கிள் வீரர்கள் அணிவகுப்புடன் கிண்டியில் உள்ள மாளிகைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர் ஓய்வு எடுத்தார். இன்று மாலை 4.30 மணிக்கு கவர்னர் மாளிகை தர்பார் ஹாலில் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னராக பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
வித்யாசாகர் ராவுக்கு, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
-ஆர்.மார்ஷல்.