காவிரியில் உடனடியாக கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும்: தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவு! – உத்தரவின் உண்மை நகல்.

Hon'ble Mr. Justice Dipak Misra.

Hon’ble Mr. Justice Dipak Misra.

Hon'ble Mr. Justice Uday Umesh Lalit

Hon’ble Mr. Justice Uday Umesh Lalit

Record Of Proceedings_SUPREME COURT SEP 51 Record Of Proceedings_SUPREME COURT SEP 52 Record Of Proceedings_SUPREME COURT SEP 53 Record Of Proceedings_SUPREME COURT SEP 54 Record Of Proceedings_SUPREME COURT SEP 55 Record Of Proceedings_SUPREME COURT SEP 56

தமிழகத்துக்கு காவிரியில் உடனடியாக கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரியில் தண்ணீரை திறந்து விட வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று (05.09.2016) அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

காவிரியில் நாள்தோறும் 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்கவும் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், காவிரி கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு 3 நாட்களில் அணுக வேண்டும். தங்களது கோரிக்கையை தமிழகம் 3 நாட்களில் குழுவிடம் அளிக்க வேண்டும். 3 நாட்களுக்குப் பிறகு கர்நாடக அரசின் நிலையை குழு கேட்டறிய வேண்டும். இரு மாநில நிலைமைகளையும் கேட்டறிந்து 4 நாட்களில் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, உதய் உமேஷ் லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (05.09.2016) உத்தரவிட்டுள்ளது.

அடுத்த விசாரணை இம்மாதம் (செப்டம்பர்) 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com