தமிழக காவல்துறை தலைவராக இருந்த அசோக்குமார் (06.09.2016) விருப்ப ஓய்வில் சென்றார். இதைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரன் மாற்றப்பட்டு, உளவுத்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். மேலும், தமிழக காவல்துறை தலைவராகவும் (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பதவி காலியாக இருந்தது. இந்த பதவிக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக இருந்த எஸ்.ஜார்ஜ் சென்னை பெருநகர காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக உள்ள சு.அருணாச்சலம், தமிழ்நாடு போக்குவரத்து கழக லிமிடெட் (திருநெல்வேலி) லஞ்ச ஒழிப்பு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com