சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து மொத்தம் 16 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடகம் காவிரி ஆற்றில் திறந்து விட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு எதிராக கர்நாடக மாநிலத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில், காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவை பயன்படுத்தக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
மேலும், “தேசிய சொத்தான அணைகள் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அணைப் பாதுகாப்பு வரைவு மசோதா அரசியல் சட்டத்திற்கு எதிரானது.
மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றும் அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-கே.பி.சுகுமார்.