தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உடல் நிலை சீராக உள்ளது, விரைவில் வீடு திரும்புவார்.

JayalalithaaApollo Hospitals

தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நேற்று (22.09.2016) தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்நிலையில் நேற்று இரவு ஜெ.ஜெயலலிதாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Apollo Hospitals 23.09.2016

தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஜெ.ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அவர் விரைவில் வீடு திரும்புவார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com