பித்து பிடித்து அலையும் சித்தராமைய்யா!- உச்ச நீதிமன்ற உத்தரவை உதாசீனப்படுத்தும் கர்நாடகா.

1.CM-Shri-Siddramaiah-briefing-to-media-at-official-residence-Cauvery All-party-floor-leaders-Meeting-held-at-Conference-Hall-Vidhan-Soudha 2

All-party-floor-leaders-Meeting-held-at-Conference-Hall-Vidhan-Soudha

2.CM-Shri-Siddaramaiah-met-Former-PM-H.D-Devegowda-at-Padmanabhanagar-300x200

Uma bharathiCM-Shri-Siddaramaiah-met-Former-CM-S.M.-Krishna CM-Shri-Siddaramaiah-met-His-Excellency-Shri-Vajubhai-Rudabhai-Vala-Governor-of-Karnataka

Joint-Business-Advisory-Committee-Meeting-held-in-Vidhana-Soudha

Joint-Business-Advisory-Committee-Meeting-held-in-Vidhana-Soudha1காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் ஆலோசனையின் பேரில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.

அந்த வழக்கின் அடிப்படையில், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டு மூன்றரை ஆண்டுகளாகியும், மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு இன்னும் அமைக்கவில்லை.

மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் அடிப்படையில் தான் காவிரி மேற்பார்வைக் குழுவை  உச்ச நீதிமன்றமே அமைத்தது.

காவிரி பிரச்னைக்கு காவிரி மேலாண்மை வாரியம் தான் ஒரே நிரந்தரத் தீர்வு என்பதால், அதை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசுக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா பல முறை கோரிக்கை வைத்தார். ஆனால், அதை மத்திய ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவே இல்லை.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் போலவே, தற்போதைய பிரதமர் நரேந்திர மோதியும் மௌனம் சாதித்து வந்தார்.

இந்நிலையில் 20.09.2016 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்காதது ஏன்? இத்தனை காலம் மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது? என்று தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.

அதோடு, காவிரி விவகாரத்தில் மேற்பர்வை குழுவை தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்கள் எதிர்ப்பதால் மேலாண்மை வாரியமே முடிவு என்றும் தங்களது கருத்தை தெரிவித்தனர். காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கு வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு காலக்கெடு விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், செப்டம்பர் 27-ம் தேதி வரை கர்நாடக அரசு காவிரியில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்குத் திறந்து விட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் மூலம் தமிழகத்திற்கு நீதி கிடைத்ததை பொருத்துக் கொள்ள முடியாத கர்நாடக மக்கள், கர்நாடக அரசின் முழு ஆதரவுடன் தொடர்ந்து வன்முறையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Ka.assm

தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்பதை வலியுறுத்தி, கர்நாடக மாநில அனைத்து கட்சி கூட்டத்திலும், கர்நாடக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து  நடக்க வேண்டிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா, அரசியல் ஆதாயத்திற்காகவும், ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காகவும் பித்து பிடித்து அலைகின்றார். அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாகவும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதமாகவும் பேசித் திரிகின்றார். அதற்காக அவரது அரசியல் எதிரிகளைகூட தேடிச் சென்று சந்தித்து பேசுகிறார். கடந்த 3 தினங்களாக பல்வேறு நாடகங்களை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்.

ஆட்சியே போனாலும் பரவாயில்லை, ஆனால், உச்ச நீதிமன்றத்தின் ஆணையை அமல்படுத்தமாட்டோம் என்பதில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா பிடிவாதமாக இருக்கிறார். இதன் மூலம் இந்திய ஒருமைப்பாடு கேள்வி குறியாகியுள்ளது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com