கர்நாடக மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உச்ச நீதிமன்றத்தைக் கட்டுப்படுத்தாது என்று நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், கர்நாடக மாநிலத்திலுள்ள பிரச்னைகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்ற மாண்பு பாதிக்கும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு தினமும் 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எதிராக தமிழக அரசின் மனு மீதான விசரணையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த கருத்தினை தெரிவித்துள்ளனர்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com