காவிரி டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்தது குறித்து காவிரி உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவினர் சென்னையில் ஆலோசனை.

kaveri committee

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய நீர் கமிஷன் தலைவர் ஜி.எஸ். ஜா தலைமையிலான குழு, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் பாசன பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்தது. தமிழகத்தில் இந்த ஆய்வு நேற்றுடன் முடிந்தது. இந்த குழு இன்று (11.10.2016) சென்னை வந்தது. சென்னையில் தலைமைச்செயலாளர் ராமமோகன் ராவ் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே பிரபாகர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த அறிக்கை வரும் 17 அல்லது அதற்கு முன்னர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

-ஆர்.அருண்கேசவன்.