தமிழக முதல்வராக ஜெ.ஜெயலலிதா நீடிப்பார், அவர் வகித்து வந்த அமைச்சரவை இலாகாக்கள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

tn.govenor tncm

File Photo.TN.GOVERNOR

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருடைய இலாகாக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூடுதலாகக் கவனித்துக் கொள்வார் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 166 பிரிவு 3-இன் படி, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இதுவரை வகித்து வந்த அமைச்சரவை இலாகாக்கள் அனைத்தும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்படுகின்றன.

முதல்வரின் அறிவுரைப்படி தமிழக அமைச்சரவைக் கூட்டங்களை ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து நடத்துவார். முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் அறிவுரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முதல்வர் பணிக்கு ஜெ.ஜெயலலிதா மீண்டும் திரும்பும் வரை இந்த மாற்று ஏற்பாடு தொடரும். ஜெ.ஜெயலலிதா முதல்வராக நீடிப்பார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com