தண்ணீர் டேங்க் உள்ளது. ஆனால், அதில் குடிநீர் இல்லை!-அடிப்படை வசதிகள் இல்லாத ஆரணி!

??????????

?????????? ??????????திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் அருகே, சுமார் ரூ.40 இலட்சம் செலவில் 74 கடைகள் பழ வியாபாரிகளுக்காக கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ளது.

மேலும், புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள “நம்ம டாய்லெட்” திறக்கப்படாமல் உள்ளதால் பொது மக்கள் பெறும் அவதிப்படுகின்றனர். இங்கு பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

இப்பகுதியில் நகராட்சி அலுவலகம், புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம் பகுதிகளில் தண்ணீர் டேங்க் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதில் குடிநீர் இல்லை. சம்மந்தப்பட்ட துறைச்சார்ந்த அதிகாரிகள் இதை கவனிப்பார்களா?

-ச.ரஜினிகாந்த்.