திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி சார்பில், அரிசி ஆலை அதிபர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் கலைந்துரையாடல் நிகழ்ச்சி ஆரணி தாலுக்கா நெல் அரிசி வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் 23.10.2016 அன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி முதன்மை மேலாளர் கையும்கான், ஆரணி கிளை மேலாளர், அரிசி ஆலை அதிபர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வாடிக்கையாளர்களின் குறை, நிறைகள் கேட்கப்பட்டது.
மேலும், வங்கி கடன்கள் பெறுவதற்கு எளிமையான வழிமுறைகளை எடுத்துரைத்தார்கள். தனிநபர் கடனும், வீட்டு கடனும் எளிமையான முறையில் பெற்றுக்கொள்ளலாம். அதன் மட்டுமல்லாமல் தொழில் புரிவோர்க்கு ரூ.25 கோடி வரை கடன் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான சேவை வரி கட்டணம் 31.03.2017 வரை கிடையாது.
-மு. ராமராஜ்.
-ச.ரஜினிகாந்த்.