சிங்கள இசை கலைஞர் அமரதேவவின் உடலை சுமந்த இலங்கை ஜனாதிபதி!

சிங்கள இசை கலைஞர் அமரதேவ.

சிங்கள இசை கலைஞர் அமரதேவ.

சிங்கள இசை கலைஞர் அமரதேவவின் உடலை சுமந்த இலங்கை ஜனாதிபதி சிங்கள இசை கலைஞர் அமரதேவவின் உடலை சுமந்த இலங்கை ஜனாதிபதி1

இலங்கையின் பிரபல சிங்கள இசை கலைஞர் கலாநிதி பண்டித் டப்ளியூ.டி. அமரதேவ 03.11.2016 அன்று இயற்கை எய்தினார்.

88 வயதான அமரதேவ ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இயற்கை எய்தினார்.

சிங்கள இசை கலைஞர் வித்துவான் அமரதேவ மறைவிற்கு, இலங்கை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

Maestro Amaradeva with maythripala

sri sena

இந்நிலையில் அமரதேவவின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக 04.11.2016 காலை 10 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது அவரது உடல் அடங்கிய பேழையை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாங்கி வந்தார். இலங்கை ஜனாதிபதி ஒருவரால், கலைஞர் ஒருவரின் உடல் இவ்வாறு தாங்கி வரப்பட்டமை இலங்கை வராலாற்றில் இதுதான் முதல் முறையாகும்.

மேலும், இசை கலைஞர் அமரதேவவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இலங்கை தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும், அனைத்து வீடுகளிலும் வெள்ளைக் கொடியை தொங்க விடுமாறும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற பிரபல மூத்த சிங்களமொழிப் பாடகர் டபிள்யூ.டி. அமரதேவவின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை 6 மணிக்கு பூரண அரச மரியாதையுடன் இடம்பெற்றது.

-வினித்.