உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடக்கிறது. தேர்தலில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இதில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
அமெரிக்க அதிபராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? என்ற எதிர்ப்பார்ப்பு உலகம் முழுவதும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கழுதை சின்னத்திலும், குடியரசுக்கட்சி வேட்பாளர் டிரம் யானை சின்னத்திலும் போட்டியிட்டு உள்ளனர். இதனால் வெள்ளை மாளிகைக்குள் செல்ல போவது கழுதையா? யானையா? என்ற கேள்வி உலகம் முழுவதும் உள்ள சூதாட்டக்காரர்கள் மத்தியில் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.
-எஸ்.சதிஸ் சர்மா.