வங்கிகளில் பணம் மாற்ற வருவோரின் கை விரலில் அழியாத மையை பயன்படுத்த தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து நிதி அமைச்சகதுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
வங்கிகளில் பணம் மாற்ற வரும் பொதுமக்களின் வலது கையின் ஆட்காட்டி விரலில் அழியாத மை வைக்கப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், ஒரு சில மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வங்கிகளில் அழியாத மை வைப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.
வங்கிகள் அழியாத மையை பயன்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அழியாத மை என்பதே, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பொருள். இதனை வேறு ஒரு பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தும் பட்சத்தில் அதற்கு தேர்தல் ஆணையத்திடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அதுபோன்ற எந்த கோரிக்கையும் மத்திய அரசிடம் இருந்து பெறப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com