பாட்னா – இந்தூர் விரைவு ரயில் தடம் புரண்டதில் 100-க்கும் மேற்பட்டோர் பலி!

kanpur train derailmentIndore ExpressHLNHLN1President of India condoles the loss of... Indore-Patna Express in Uttar PradeshPM condoles the loss of lives due to the derailing of the Patna-Indore ExpressPM announces ex gratia of Rs. 2 lakhs f... accident in Uttar Pradesh, from PMNRF

Vice President expresses grief over los...ves in the train accident at Pukhrayanஉத்தர பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம், புகாரியன் அருகே பாட்னா – இந்தூர் விரைவு ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டது. இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானர்கள். ஏராளமானோர் காயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரித கதியில் நடக்கிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் தலைமையில் விசாரணை நடத்த மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பலியானவர்களுக்கு நிதியுதவி அளிக்க மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

உத்தர பிரதேச மாநில அரசு ரயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.

பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3.5 லட்சம் வழங்கவும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் மத்திய பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கவும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் பிரதமர் நரேந்திர மோதி உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளது.

பலியானவர்கள் குடும்பத்திற்கு, இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி,  துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி  ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com