கருப்பு பணம் மனித குலத்திற்கு எதிரான ஒரு குற்றம் ஆகும்!-வருவான வரித்துறை எச்சரிக்கை.

income-taxDemonetisation-of-Old-High-Denomination...posits-in-Bank-Accounts-18-11-2016

கறுப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோதி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து கறுப்பு பண முதலைகள் பல்வேறு குறுக்கு வழிகளை கையாண்டு வருகின்றனர்.

மத்திய அரசின் ஜன்தன் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு வங்கி கணக்கு துவக்கப்பட்டது. கறுப்பு பணம் பதுக்கியவர்கள் ஏழைகளுக்கு கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை காட்டி அவர்களின் வங்கி கணக்குகளின் வழியாக கறுப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், கறுப்பு பணத்தை மாற்ற உதவுவோர் மீது பினாமி பண பரிவர்த்தனை சட்டத்தின் படி 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

முன்னதாக, கடந்த 8 ம் தேதிக்கு பிறகு வங்கி கணக்கில் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் டிபாசிட் செய்தவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 8 ம் தேதிக்கு பிறகு அதிகப்படியான பண டிபாசிட் செய்துள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மதம் சார்ந்த அறக்கட்டளைகளுக்கும் வருவான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

-கே.பி.சுகுமார்.