இன்றுடன் முடிவடைவதாக இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்வதற்கான காலக்கெடுவினை டிசம்பர்-15 வரை நீட்டித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியா முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8 ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, செல்லாத ரூபாய் நோட்டுகளை பொது மக்கள் மாற்றி வருகின்றனர். அத்தியாவசியத் தேவைகளுக்கு செல்லாத ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து அதற்கு இன்று (நவம்பர் 24) நள்ளிரவு வரை என அரசு காலக்கெடு நிர்ணயித்தது.
அதுவரை பெட்ரோல் நிலையங்கள், சேவைகள் வழங்கும் அனைத்து அரசு அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் ஆகியவற்றில் செல்லாத ரூபாய் நோட்டுகளை நவம்பர் 24-ஆம் தேதி வரை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்ப ட்டிருந்தது.
இந்நிலையில் செல்லாத ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ள டிசம்பர் 15-ஆம் தேதி வரை காலக்கெடுவை நிர்ணயித்தது தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விவரங்களாவன:
குடிநீர் மின்கட்டணம் செலுத்த மட்டும் பழைய ருபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை பெற முடியாது. டெபாசிட் செய்ய மட்டுமே முடியும்.
அதே போல் மத்திய மாநில நகராட்சிப் பள்ளிகளில் கல்விக்கட்டணம் செலுத்தலாம்.
வெளிநாட்டினர் தங்கள் நாட்டு பணத்திற்கு ரூபாய் 5000 வரை இந்தியப் பணமாக, தங்களது பாஸ்போர்ட்டை காண்பித்து, வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ஆர்.மார்ஷல்.