Pradhan Mantri Jan-Dhan Yojana (PMJDY) ஜன் தன் வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பவர்கள் மாதத்திற்கு ரூ. 10,000 மட்டுமே எடுக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஜன் தன் வங்கிக் கணக்குகளில் மட்டும் இதுவரை மொத்தம் ரூ.64,252 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் பலர் தங்களது பணத்தை வெள்ளையாக மாற்ற ஜன் தன் வங்கிக் கணக்குகளை தவறுதலாக பயன்படுத்துவது மத்திய அரசுக்கு தெரியவந்தது. இதனையடுத்து ஜன் தன் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தவர்கள், அந்த பணத்தை எடுக்க ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் ஜன்தன் கணக்கு வைத்திருப்போர் வங்கியில் இருந்து மாதம் ரூ.10 ஆயிரம் மட்டுமே பணம் எடுக்கலாம். அதற்கு மேல் பணம் எடுக்க வேண்டுமானால் வங்கி மேலாளரின் அனுமதி பெற வேண்டும். விபரம் தராத வாடிக்கையாளர்கள் ரூ.5 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். ஜன்தன் கணக்கு மூலம் கறுப்பு பணத்தை வெள்ளையாக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.