புதிய 20 ரூபாய் மற்றும் 50 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: – 2005-ல் வெளிவந்த 20 ரூபாய் நோட்டுகள் சில மாற்றங்களுடன் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
20 ரூபாய் நோட்டுகளில் ‘எல்‘ உடன் புதிய வரிசை எண் அச்சடித்து வெளியிடப்படும். மேலும், புதிய நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் கையெழுத்து இடம் பெற உள்ளது.
50 ரூபாய் நோட்டுகளில் ‘எல்‘ இடம்பெறாது. பழைய 20, 50 ரூபாய்களை பயன்படுத்தலாம் எனவும் ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com