தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி இந்திய கடற்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடற்படை வீரர்களின் தியாகத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோதி விடுத்துள்ள செய்தியில்,
அனைத்து கடற்படை அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கடற்படை தின வாழ்த்துக்கள். நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துள்ள கடற்படை வீரர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்து. அவர்களின் வீரத்திற்கு தலைவணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-எஸ்.சதிஸ் சர்மா.