தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு 04.12.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இதய மருத்துவர்கள், நுரையீரல் மருத்துவ நிபுணர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர்கள் ஆகியோர் இணைந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்று, அப்பல்லோ மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.40 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை (04.12.2016) இரவு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா உடல் நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை வெளிவருவதற்கு முன்பாகவே, இது குறித்து தந்தி தொலைக்காட்சியில் செய்தி வெளியானது. இந்த தகவல் மற்ற ஊடகங்களிலும் காட்டு தீ போல் பரவியது.
ஊடகங்கள் கொழுத்திப் போட்ட திரியில் அ.தி.மு.க. தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இரவு முழுவதும் தூங்காமல் அப்பல்லோ மருத்துவமனையின் முன்பு காத்திருந்தனர். ஒட்டு மொத்த இந்தியாவும், உலக முழுவதும் உள்ள தமிழர்களும் பதறிப்போனார்கள்.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்களுக்கும், டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து இரவோடு இரவாக உத்தரவு பறந்தது. அனைத்து எஸ்.பி.க்களும் உடனடியாக அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். மேலும், ‘ரெட் அலெர்ட்’ எனப்படும் உஷார் நிலையும் தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் எஸ்.பி.க்களுக்கு உத்தரவிடப்பட்டது.
தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவைப் பார்க்க நேற்றிரவு அப்பல்லோவுக்கு வந்த பொறுப்பு ஆளுநர் வித்யாசாகரிடமிருந்து இதுவரை அறிக்கை ஏதும் வரவில்லை. ஆளுநரின் அறிக்கைக்குப் பின்னர்தான் முதல்வரின் உடல்நிலை குறித்த தெளிவு கிடைக்கும் என்பதால் அனைவரும் காத்துள்ளனர். ஆனால், இதுவரை ஆளுநரின் அறிக்கை வெளியாகாமல் இருப்பதால் அனைவரும் தொடர்ந்து கவலையுடன் காத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு “எக்மோ” கருவி மற்றும் பிற உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ நிபுணர் குழுவினரால் அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், இன்று (05.12.2016) பகல், 12:40 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com