காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து மாநில அரசுகள் தாக்கல் செய்யும் மனுவை விசாரிக்கும் அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
காவிரி நடுவர் மன்றம் தொடர்பான ஆட்சேப மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து மாநில அரசுகள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்று கேட்டு மத்திய அரசு ஆட்சேப மனு தாக்கல் செய்தது.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமித்வா ராய், தீபக் மிஸ்ரா ஆகியோர், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று தீர்ப்பளித்தது.
மேலும், விசாரணையின் போது, இந்த மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை என்று கூறி மத்திய அரசு செய்த வாதத்தையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
காவிரி நடுவர் மன்ற விவகாரம் குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் வரும் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளது.
அன்று வரை அதாவது டிசம்பர் 15ம் தேதி வரை காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு தலா 2 ஆயிரம் கன அடி நீர் வழங்கவும் கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com