சரித்திரம் தெரியாத சசிகலா!

VK SASIKALA

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, சசிகலா நேற்று (05.01.2017) வெளியிட்ட அறிக்கையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பெயரையோ, அவரது செயல்பாடுகளையோ எந்த இடத்திலும் சசிகலா குறிப்பிடவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

SASI  LR TO PM

SASIKALA LR TO pm2

சரித்திரம் தெரியாத சசிகலா, அதை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், வழக்கம் போல வாய் மூடி மௌனமாகவே இருந்துவிட வேண்டும். எல்லாம் தனக்கு தெரியும் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக, யாரோ எழுதிக்கொடுத்ததை அறிக்கையாக வெளியிடுவது ஆரோக்கியமான விசயமாக தெரியவில்லை. ஜெ.ஜெயலலிதாவின் வரலாற்று சாதனைகளை மூடி மறைப்பது தீயை திரைப்போட்டு மறைப்பதற்கு சமம்.

கச்சத்தீவில் சுதந்திரமாக நடமாட வேண்டிய நம் தமிழ் மக்கள், இன்று அங்கு அகதிகளாக சென்று வர வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. நமது தமிழக மீனவர்களுக்கு நிரந்தர நிம்மதி கிடைக்க வேண்டுமானால், கச்சத்தீவு நம் கைவசம் வந்தாக வேண்டும் என்பதை வலியுறுத்தி, தான்  வாழ்ந்த காலம் வரை அதற்காகவே பல்வேறு வழிகளில் ஜெ.ஜெயலலிதா கடுமையாக போராடினார்.

1960-ம் ஆண்டைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முற்றிலும் முரணாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டு இருக்கிறது என்று கூறி, அப்போது தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவராக இருந்த அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மீண்டும் தான் முதலமைச்சரான பிறகு, தமிழக சட்டசபையில் ஜூன் 9, 2011 அன்று நடந்த சட்டபேரவை தீர்மானத்தில் தமிழக வருவாய் துறையையும் சேர்க்க வேண்டும் என்று ஜெ.ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார்.

அதற்கான ஆதாரங்களையும், ஆவணப்படங்களையும் சேகரித்து ஜெ.ஜெயலலிதாவிடம் ஒப்படைத்தவன் என்கிற முறையில் இதுப் பற்றிய  அனைத்து உண்மைகளும் எனக்கு தெரியும்.  

தமிழகத்தின் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி சரித்திர சாதனை படைத்தவர் ஜெ.ஜெயலலிதா என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. இதை யாராலும் மூடி மறைக்க முடியாது.

டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com