பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 218 மீனவர்கள் வாகா எல்லை வழியாக இந்தியா வந்தனர்!  

Central Jail Karachi  fCentral Jail Karachiindian-fishermen2india-fishermenindian-fishermen3

குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றம்சாட்டி பாகிஸ்தான் அதிகாரிகள் அவ்வப்போது கைது செய்வது வழக்கம். அவ்வாறு கைது செய்யப்பட்ட பல்வேறு மீனவர்கள் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் கராச்சியில் உள்ள மாலிர் சிறையில் வாடிய 219 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு நல்லெண்ண நடவடிக்கையாக விடுதலை செய்தது. ஆனால், அவர்களில் ஒரு மீனவர் மாரடைப்பால் திடீரென்று உயிரிழந்தார்.

இதனிடையே கராச்சி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 218 மீனவர்கள் அங்கிருந்து ரயில் மூலம் லாகூர் சென்றனர். அங்கிருந்து அவர்கள் வாகா எல்லை வழியாக இந்தியா வந்தனர்.

கடந்த 10 நாட்களில் இதுவரை 439 பேர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக டிசம்பர் 25-ம் தேதி கராச்சி சிறையில் இருந்து 220 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-எஸ்.சதிஸ் சர்மா.