இன்று காலை அலங்காநல்லூரில் நடைபெற்ற கிராம கமிட்டிக் கூட்டத்தில் ஏராளமான கிராமத்தினர் பங்கேற்றனர்.
அப்போது, ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வரும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தனி இட வசதி செய்து தரப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
பிறகு, பிப்ரவரி 1ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவது என்று ஊர் கமிட்டியும் விழா கமிட்டியும் முடிவு செய்து, அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தில் கையெழுத்திட்ட கிராம மக்கள், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தத் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவுக்கு கடிதம் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-ஆர்.அருண்கேசவன்.