தமிழக கலாசாரத்துக்கு எதிராக பேசிய ராதா ராஜன் மற்றும் சுப்ரமணியன் சுவாமி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!-ராதா ராஜன் தமிழக மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு!

sswamy

பீட்டா அமைப்புக்கு தடை விதிக்கக் கோரியும், பீட்டா அமைப்பைச் சேர்ந்த ராதா ராஜன் மற்றும் சுப்ரமணியன் சுவாமி இருவரும் தமிழக கலாசாரத்துக்கு எதிராக பேசி வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ராதா ராஜன்.

ராதா ராஜன்.

பீட்டா அமைப்புக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சூர்யபிரகாசம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதி மகாதேவன் மறுப்பு தெரிவித்துவிட்டார். மேலும் வழக்காகத் தொடர்ந்தால் நாளை விசாரிக்கிறேன் என்றும் கூறினார்.

மேலும், பீட்டா அமைப்பைச் சேர்ந்த ராதா ராஜன் மற்றும் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராகவும் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ் கலாசாரத்துக்கு எதிராக இருவரும் பேசி வருவதாக  வழக்குரைஞர் சூரிய பிரசாகம் குறிப்பிட்டுள்ளார்.

மனுவை நாளை விசாரிப்பதாகக் கூறி நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில், ராதா ராஜன் தனது கருத்துகள் தமிழக மக்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன் என்று ராதா ராஜன் தெரிவித்துள்ளார். 

 -டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com