சென்னை எண்ணூரில் கச்சா எண்ணெய் பரவி உள்ள கடற்கரை பகுதியை, தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் பார்வையிட்டார். அவருடன் அமைச்சர்கள் பெஞ்சமின், ஜெயக்குமார், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கடலோர காவல்படை ஏடிஜிபி சைலேந்திரபாபு மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ள அதிகாரிகளிடம் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்தார்.
-ஆர்.மார்ஷல்.