முதலமைச்சர் என்கிற பொறுப்பு மக்கள் தருகிற பொறுப்பு; சசிகலாவை முன்மொழிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன உரிமை இருக்கிறது?- நடிகர் ஆனந்தராஜ்  ஆதங்கம்.

Actor Anandaraj in chennai Airport

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆனந்தராஜ், சட்டமன்றக்குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதில் ஏன் இத்தனை அவசரம் என்று தெரியவில்லை. நடக்கின்ற ஆட்சியே நல்லாகத்தானே ஜனநாயக முறைப்படி போய்க்கொண்டிருந்தது.

சசிகலாவை தேர்ந்தெடுப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் உட்பட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை இருக்கிறது என்றாலும், அவர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களிடம் இது குறித்து கேட்டிருக்க வேண்டும். நாங்கள் சசிகலாவை தேர்ந்தெடுக்கப்போகிறோம், தேர்ந்தெடுக்கலாமா? என்று கேட்டிருக்க வேண்டும்.  தெருத் தெருவாக சென்று வெயிலில் அலைந்து வாக்கு சேகரித்தவன் நான்.  அதனால், எனக்கு இது குறித்து பேச உரிமை இருக்கிறது.  

முதலமைச்சர் என்கிற பொறுப்பு மக்கள் தருகிற பொறுப்பு. தயவு கூர்ந்து அவசரம் காட்டாமல் சிந்தித்து செயல்பட வேண்டும். சசிகலாவை முன்மொழிய ஓ.பன்னீர்செல்வத்திற்கு என்ன உரிமை இருக்கிறது? மக்களுக்குத்தான் அந்த உரிமை இருக்கிறது. அவர் வாக்களித்த மக்களை கேட்டிருக்க வேண்டும்.    மறு தேர்தல் வந்து மக்கள் தேர்ந்தெடுத்தால் என் முதல்வரும் அவர்தான் என்று தெரிவித்தார்.  

 -கே.பி.சுகுமார்.