இலங்கையில் ஆராச்சி தொன் டேவிட் (வயது75) என்ற நபர் 20 வருடமாக மயானத்தில் வாழ்ந்து வருகிறார்.
இலங்கையில் பல பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றி வந்தேன். அநுராதபுரத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது, தனது அலுவலகத்தில் வைத்து மாட்டிறைச்சி கடை உரிமையாளரிடம் ரூ.300 இலஞ்சமாக பெற்றேன். அக்காலத்தில் ரூ. 300 என்பது மிகப்பெரிய பணத் தொகையாகும். இப்போது என்றால் சாதாரண ஒரு தொகை. இலஞ்சம் வாங்கிய போது அவ்விடத்திற்கு வந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டேன்.
இதனையடுத்து கைது செய்த அவர்கள், போலிஸார் ஊடாக என்னை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, எனக்கு இரண்டு வருடம் சிறைத்தண்டனையும் அபராத தொகையும் விதிக்கப்பட்டது. இரண்டு வருடம் சிறையில் இருந்தமையால் தொழிலை இழந்தேன். மீண்டும் தொழிலை கேட்டு நீதிமன்தில் மேல்முறையீடு செய்தும் எனது நியாயங்களை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனையடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் உறவினர்களை விட்டு பிரிந்து சென்று நாட்டின் சில இடங்களில் ஆங்கில ஆசிரியராக செயற்பட்டேன். பின்னர் தான் செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவிப்பதற்காக மயானத்தில் 20 வருடமாக வசித்து வருகின்றேன். அயலவர்கள் வழங்கும் உணவுகளை உண்டு வாழ்ந்து வருகின்றேன். மரணிக்கும் வரை இங்கேயே வாழ்வேன்.
நாம் வாழ்க்கையில் செய்யும் ஒவ்வொரு விடயங்களுக்கும் பின் விளைவுகள் உண்டு. இதனை ஒவ்வொரு மனிதனும் ஆழமாக சிந்தித்தால் சிறப்பான வாழ்க்கை வாழலாம் எனவும் தெரிவித்தார்.
-வினித்.