சசிகலாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து நீக்குவதாக சசிகலா அறிவித்தார்.
இதன் பின் செய்தியாளர்களை ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்தில் சந்தித்தார்.
அப்போது, ஜெயலலிதா என்னை பொருளாளர் பதவியில் 10 ஆண்டுகளுக்கு முன் நியமித்தார். அப்போது முதல் அந்த பணியை நிறைவாக செய்து வருகிறேன்.
மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் உள்ள வித்தியாசம் சிரிப்பு ஒன்றுதான் அதனால், எதிர்க்கட்சி செயல் தலைவர் ஸ்டாலினை பார்த்து சிரித்தது குற்றமாகாது. என் மடியில் கனமில்லை; எனவே, நான் யாருக்கும் பயப்பட தேவையில்லை.
ஆளுநருடனான எனது சந்திப்பு குறித்து பொறுத்திருந்து பாருங்கள். என்னை அம்மா கொடுத்த பதவியில் இருந்து யாரும் நீக்க முடியாது என்று தெரிவித்தார்.
-கே.பி.சுகுமார்.